முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அகல்விளக்கு ஏற்றுவதற்கு முன் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி இன்று அகல் விளக்கு ஏற்றுவதற்கு முன் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22-ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்ற வலியுறுத்தினார். அதை தொடர்ந்து 24-ம் தேதி 2-வது முறையாக உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சமூக இணையத்தில் பிரதமர் மோடி கூறுகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ( இன்று) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9  நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, சூப்பர் பவர் பிரகாசம்  ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும் என்று கூறினார்.

இன்று அகல்விளக்கு அல்லது மெழுவர்த்தியை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி  அறிவுறுத்தியுள்ளது. ஒன்றாக நாம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், அடிக்கடி ஹாண்ட் சானிடைசர் கொண்டு கைகளை நன்கு கழுவ  வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதில், ஆல்கஹாலிக் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 62 சதவீத உயர் எத்தில் ஆல்கஹாலை உள்ளடக்கிய சானிடைசர்கள் எளிதில் தீ பற்ற கூடிய தன்மை கொண்டது. மேலும் இது போன்ற சானிடைசர்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கைகளில் பயன்படுத்தும் போது அதனை  நன்கு உலர வைக்க வேண்டும். அதேபோல, தீ அதிகம் பரவும் இடங்களில் நின்று சானிடைசர்களை பயன்படுத்தக் கூடாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து