முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அம்மாவின் அரசு,  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று  தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.  தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை  அறிவித்து வருகிறது.  

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவிகித தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.  எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து  பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை. தினமும் தொழிலாளர்களுக்கு Thermal Scanner மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.  பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். 

சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.  தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள்  இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.  சோப்பு மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer) உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இது தவிர, பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedures) தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும்  அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த  அம்மாவின் அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளுக்கு,  முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து