முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமராக மோடி 2-வது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு: நாளை கோலாகலமாக கொண்டாட பா.ஜ.க. திட்டம்

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறை பதவியேற்ற ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது  முறையாக மத்தியில் ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்று வரலாற்று பெருமையை நேரு,  இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்தபடியாக நரேந்திர மோடி பெற்றார்.

பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று வரும் 30-ம் தேதியுடன் ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வருடங்களாக நிலுவையில் இருந்த  பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. குறிப்பாக, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது, கொரோனா பரவலை கையாள்வது,  இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட்டு  வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து