காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
TN assembly 2020 06 03

Source: provided

சென்னை : காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின்  125-வது பிறந்தநாளான நாளை 5-ம் தேதியன்று, அன்னாரின் நினைவிடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் மட்டும் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஜூன் 5ஆம் நாள் கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பிறந்தநாள் சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் அரசின் சார்பில் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்படுகிறது. 

பொதுமக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், ஊரடங்கு உத்தரவு 30.6.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாக கடைபிடிக்க, பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற ஜூன் 5-ம் நாள் கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின்  125-வது பிறந்தநாள் அன்று, அன்னாரின் நினைவிடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் மட்டும் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார். 144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், நினைவிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த  மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து