முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் நெட் திட்ட டெண்டரில் விதிமீறலா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பாரத் நெட் திட்டத்தில் மறு டெண்டர் கோருவதற்கான அறிவிப்பு வந்துள்ளதாகவும், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் திட்டத்தின் பயன் மக்களை சென்றடையும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் கண்ணாடி இழை குழாய் மூலம் இணைக்கப்பட்டு இணையதள சேவை வழங்கப்பட்டு , தமிழக அரசின் இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்கள் கிராமங்களில் இருந்தே பெறும் வகையில் அமைக்கப்பட்டதே பாரத் நெட் திட்டம். இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் புகாா்கள் தெரிவித்த நிலையில், திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் நேற்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், 

பாரத் நெட் திட்டம் நிறைவேறினால் எஸ்.சி.வி போன்ற கேபிள் டிவி தொழில்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற காரணத்தால் இந்த தொழிலில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கின்றனர். பாரத் நெட் திட்டத்துக்காக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ( டான்பிநெட்) டிசம்பர் 5 2019 அன்று வலைதளம் மூலமாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

ஒப்பந்த புள்ளி முடிப்பதற்கான பணிகள் முடிவடைதற்குள் மத்திய அரசின் கீழ் இயங்கும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சென்னையில் உள்ள அறப்போர் இயக்கம் , டான்பிநெட் கோரிய ஒப்பந்த புள்ளியில் மேக் இன் இந்தியா விதிமுறைகளின் கீழ் இந்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என தெரிவித்து டெண்டரை ரத்து செய்தார்கள். 

இதை தொடர்ந்து மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தக துறை, இந்த விவகாரத்தில் கடந்த 23-ம் தேதி விசாரணை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் ஒப்பந்த புள்ளியில் மத்திய அரசின் வழிக்காட்டுதலின் படி இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவது முழுவதுமாக கடைபிடிக்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து தற்போது மறு டெண்டருக்கான உத்தரவு வரப்பெற்றுள்ளதுள்ளது. இதில் மேக் இன் இந்தியா திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய உற்பத்தியாளர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும். மறு ஒப்பந்தபுள்ளி கோரப்பட வேண்டும் என்றால் ஏற்கனவே விடுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தான் ரத்து செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் டெண்டர் விடுவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிக்கை விடுகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் அறிக்கையால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை எனவும், அவர் தான் மக்களின் வெறுப்பை பெற்றுள்ளார். பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக டெண்டர் விடப்பட்டு பணிகள் 2021 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து