முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை. இன்று முதல் எவையெல்லாம் இயங்கலாம். எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், ரெஸ்டாராடெண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களும், ரிக்சாக்களும் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 188-க்கும் மேலான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இதுவரை 9 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார்.

அதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்தடுத்து பலமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரையில் இந்த முழு ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலில் இருந்து வந்தது. மதுரையில் முதலில் 12-ம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு பிறகு மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று வரை அமலில் இருந்தது. 

இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மதுரை மக்கள் ஆவலோடு அந்த கேள்விக்கு விடையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை.

இன்று 15-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மதுரை கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தளர்வுகள் என்னென்ன?

இன்று 15-ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

1. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களில்  பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கருதி சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சிகள், நகரசபைகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. 

2. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. 

3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 

4. அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். 

5. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை மற்றும் ஜவுளி கடைகள்) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குளிர்சாதனை வசதிக்கு அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களுக்கும் அனுமதி இல்லை. 

டீக்கடைகளுக்கு அனுமதி

டீக்கடைகள், ரெஸ்டாரெண்டுகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் எனப்படும் மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது. டீக்கடைகளிலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிடலாம். சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் பயணிக்கலாம்.

ஆட்டோக்களுக்கு அனுமதி

அதே போல் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் டிரைவரை தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  

அனுமதியில்லா விஷயங்கள்

மத வழிபாட்டு தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை. மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமான பயணத்துக்கும் அனுமதி இல்லை.

மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், ஜிம்முகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

சமூக அரசியல் ரீதியிலான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் அனுமதி இல்லை.

வரும் 31-ம் தேதி வரை பொதுவான ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மதுரை கலெக்டருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து