இந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      இந்தியா
Air service 2020 07 14

Source: provided

புதுடெல்லி : இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிய அளவில் விமான சேவைகளில் சுமார் 2 லட்சத்து 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. உலக அளவில் 6 லட்சத்து 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விமான சேவையை சார்ந்துள்ள 30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து