முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். ஜி. சுப்பிரமணியம் நேற்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.சுப்பிரமணியம் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து