முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 லீக் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து சாதனை படைத்தார் ரொனால்டோ

புதன்கிழமை, 22 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மிலன்  50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.

இத்தாலியில் நடந்து வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியில் கடந்த திங்கட்கிழமை அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது.

யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54-வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 டிரா,4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

சீரி ஏ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்கள் (61 ஆட்டம்) அடித்துள்ளார். இதன் மூலம் சீரி ஏ, லா லிகா, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து