நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      சினிமா
Vijayalakshmi 2020 07 27

Source: provided

சென்னை : சென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் தற்கொலைக்கு முயன்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். கூடுதலாக ரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிட்டு இவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் போலீசார் அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோ காட்சி வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, நடிகை விஜயலட்சுமி மயக்கம் தெளிந்த பிறகு, அவரிடம் வாக்குமூலம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து