காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம்

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      இந்தியா
Manoj Sinha Governor Kashmir 2020 08 06

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா  செய்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தனது ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதிக்கு கிரிஷ் சந்திர முர்மு அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. எனினும்,  இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.   இந்த நிலையில், கிரிஷ் சந்திர முர்மு  ராஜினாமா செய்ததை உறுதிபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய  துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய துணை நிலை கவர்னராக  மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார்.

61-வயதான மனோஜ் சின்ஹா உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். காசியாப்பூர்  மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வில் சார்பில் போட்டியிட்ட இவர் மூன்று முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து