முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட எர்ணாவூர் சுனாமி நகரில் வசிக்கும் 800 பேருக்கு   எம்.ஆர். எப் தொழிற்சாலையின்  பாதுகாப்பு நிதி அமைப்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது  .

இதில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் போலிஸ் ஏ.சி ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி ஆனையர்  தேவேந்திரன் வரவேற்றார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கொரானோ வைரஸ் தீய சக்திகளின் மூலம் மனித குலத்தின் மீது ஏவப்பட்ட   மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது, மருத்துவர்கள், செவிலியர்கள்  காவலர்கள்  நோய்த்தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகளில் மக்களை காத்து வருகிறார்கள் .

தமிழ்நாடு முழுவதும் 2,44 லட்சம் பேர் மருந்தி்ல்லா இந்த நோயில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள்   இ-பாஸ் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, தளர்வுகள் கொடுக்கும் போது கவனமாக தரப்பட வேண்டும்  என்பது தான் கள நிலவரமாக இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது,  கனமழை தொடர்ந்தால் அபாயம் ஏற்படும் பகுதிகளை கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மீட்புப்படையினர் தயார்நிலையில் இருக்கிறார்கள், 

கொரானோ நோய்த்தொற்றால் கிட்டத்தட்ட 29 எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக பல்வேறு நோய்களுக்காக  சட்டமன்ற உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது அதற்கான கட்டணங்களை வழங்க கோருவார்கள்,

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அதற்கான விபரங்களை அளித்திருக்கிறார்கள், அவற்றை வழங்குவது குறித்த சுகாதாரத்துறையின் பரிந்துரை பெற்று துறை செயலாளர் முடிவெடுப்பார்.

ஆனால் அது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.  இதில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணங்களை வசூலிக்கப்படக்கூடாது, பேரிடரை பயன்படுத்தி சிகிச்சைக்கான கட்டணங்களை அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி கூடுதல்  கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து