முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி விளக்கம்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அளித்த விளக்கம் வருமாறு:-

புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி விளக்கமாக, தெளிவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவும், அதேபோல உயர்கல்வித் துறை சார்பாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதில் தெரிவிக்கின்ற கருத்துக்களின் அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்துக்களையும் அரசு ஆராயும். 

காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றத் தலைவர் திசையை மாற்றுகிறார். நாங்கள் மறுக்கவில்லை, திட்டவட்டமாக இங்கே தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது.

உங்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் கொண்டு வந்தீர்கள். நீங்கள் பேசுகிறீர்கள், வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் திட்டம் எல்லாம் கொண்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தீர்கள். பேரறிஞர் அண்ணா சொன்னார், முன்னாள் பாரதப் பிரதமர் நேரு  உறுதிமொழி கொடுத்தார்.   

அதனால் நீங்கள் இதை ஆழமாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி.   ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் சரி, தொடர்ந்து இருமொழிக் கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம்.

இது தேசிய கல்விக் கொள்கை. ஒரு கொள்கை வருகின்ற பொழுது அதை ஆய்வு செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்வதற்குத் தான் பள்ளிக்கல்வித் துறை சார்பாகவும், உயர்கல்வித் துறை சார்பாகவும் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுக்கள் கொடுக்கின்ற அறிக்கையைப் பொறுத்து நாம் முடிவு செய்யலாம். இதில் வேறு ஒரு கருத்தும் கிடையாது.   

நீட்-ஐ பற்றி சொன்னீர்கள். நான் பேசக்கூடாது என்று இருந்தேன். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரே பேசுகின்றபொழுது, அதைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2010-ல் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தயவு செய்து மனசாட்சியோடு சொல்லுங்கள், காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அதை யார் கொண்டு வந்தது,

காங்கிரஸ் கட்சி. மீண்டும் சீராய்வு மனு யார் போட்டது? காங்கிரஸ்.  இவ்வளவு செய்து விட்டு பேசுகின்றீர்களே? நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்கின்ற நிலையில் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். வெளியில் சென்றால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள், எல்லோரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா செய்தியும் வெளியில் வருகிறது.   

எது உண்மைக்கு புறம்பான செய்தி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இதற்குள்ளே நான் ஆழமாக செல்லவில்லை. ஏனென்றால் காலநேரம் போதுமானதாக இல்லை. இதை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்.

ஆய்வு செய்வதற்காக தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். எது, எது நமக்கு சாதக, பாதகங்கள் என்பதை அறிந்து அதற்குத் தக்கவாறு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து