பிரெஞ்ச் ஓபன் தகுதிச் சுற்று: இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா ஏமாற்றம்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      விளையாட்டு
Angita-Raina 2020 09 24

பிரெஞ்ச் ஓபன் முதன்மை சுற்றுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா, 2-வது செட்டில் ஜப்பானைச் சேர்ந்த குருமி நாராவை எதிர்கொண்டார்.  இதில் அங்கீதா ரெய்னா 3-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். இந்த போட்டி மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது. நான் என்னுடைய சர்வீஸ் கேம்ஸ் வாய்ப்பை பெற்றேன். ஆனால், அவர்  சிறப்பாக அதற்கு பதிலடி கொடுத்தார். நான் சில கேம்ஸ்களை கன்வெர்ட் செய்திருந்தார், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும் என அங்கீதா ரெய்னா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து