முக்கிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவிய பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு விருது வழங்கி கவுரவித்த ஐ.நா.

Sonu-Suite 2020 09 30

Source: provided

மும்பை : கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழைகளுக்கு உதவி செய்வது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில், சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை இதற்கு முன், பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து