முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதியிடம் அன்பாக பேசி சரணடைய வைத்த இந்திய வீரர்கள்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது தனியாக சிக்கிய பயங்கரவாதியை ராணுவ வீரர்களின் அன்பான பேச்சால் மனம் மாறி சரணடைந்தார். அவருக்கு வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர். மகனுக்கு கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ  வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

அந்த வீடியோவில், ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிக்கும் நடைபெற்ற உரையாடல் வருமாறு:-

ஜஹாங்கிர், உங்கள் ஆயுதங்களை கைவிட்டு எங்களிடம் சரணடையுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மறைந்திருக்கும் இந்த இடத்தை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம். உங்களுக்கு எதுவும் நடக்காது, உங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட மாட்டாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம் என்று இராணுவ வீரர்கள் தெரிவித்தனர். 

மேலும் கடவுளை நினைத்து சரணடையுங்கள், உங்கள் குடும்பத்தின் நிலைமை குறித்து சரணடையுங்கள் எந்த வீரர்களும் உங்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்படமாட்டார்கள் என்று ராணுவ வீரர்கள் கூறினர்.

இந்த பக்கத்தில் வாருங்கள். வேறு யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்றும்  ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள். பயங்கரவாதி தனது கால்சட்டை அணிந்து தனது மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறார். 

தயவு செய்து அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். உங்களுக்கு எதுவும் நடக்காது ஜஹாங்கிர் என்றனர்.  பின்னர் மறைவிடத்தில் இருந்து வந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி நடந்து வந்து அமைதியாக அமர்கிறார்.

இதைத் தொடர்ந்து, பயங்கரவாதியின் தந்தை பாதுகாப்பு படையினரின் கால்களைத் தொட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  உங்கள் மகனிடம் சொல்லுங்கள், அவர் ஒரு பெரிய நல்ல காரியத்தை செய்துள்ளார்.

அவரது கடந்த கால தவறுகள் அனைத்தும் மறக்கப்படும். மீண்டும் தயவு செய்து அவரை பயங்கரவாதிகளிடம் செல்ல விடாதீர்கள் என்று ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து