ஸ்பெயினில் தீப்பற்றி எரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      உலகம்
Airways-flight 2020 11 25

Source: provided

மாட்ரீட் : ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 என்ற விமானம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு சென்ற காஸ்டெல்லன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

முன்பு சேவையில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த விமானம் காஸ்டெல்லன் விமான நிலையத்தில் நிறுததி வைக்கப்பட்டு இருந்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. விமானம் பிரித்தெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் ஏற்பட்ட தீப்பொறியால் விமானம் தீப்பிடித்ததாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது இந்த விமானத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு உரிமை இல்லை எனவும் பிரித்தெடுக்கும் செயல்முறைக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து