முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் பெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள்  ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது  பயனடைவார்கள். இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை  அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை  பிறப்பித்துள்ளது. 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரி விலக்கு மற்றும் பதிவுக் கட்டணம் குறைத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் - கோவிட் பெருந்தொற்று காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுகள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணப்புழக்க குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தாங்கள் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்காக பிணை ஆவணம் பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தனர்.  

முதல்வரின் அறிவுறுத்தலின்படி இப்பொருள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை விரிவாக ஆய்வு செய்து சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பர் பாரத்) திட்டத்தின் கீழ்  31.03.2021  வரையிலான காலத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கும் ஆணையை முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை பிறப்பித்துள்ளது. 

மேலும் குறு, மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு  வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தை 1.0  விழுக்காட்டிலிருந்து 0.1 விழுக்காடாக குறைத்தும் ஆணையிட்டுள்ளது.

மைய அரசின் சொத்து பிணையில்லா அவசர கால கூடுதல் கடன் திட்டத்தின்  கீழ் சுமார் 3,09,312 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இத்திட்டம் முடிவடையும் காலம் வரை  பயனடையலாம். தற்போது, இந்திய அரசு இத்திட்டத்தினை 31.03.2021 வரை நீட்டித்துள்ளது.  பதிவுக்கட்டணம் குறைப்பினால்  குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள்  ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது  பயனடைவார்கள்.

இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை  அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை  பிறப்பித்துள்ளது. மேற்காணும் நடவடிக்கைகள் தற்போது கோவிட் பெருந்தொற்று காலத்தில்  பல்வேறு இடர்களை சந்தித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து