கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Nalinkumar 2020-11-28

Source: provided

பெங்களூர்  பா.ஜ.க. மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. பசு மாட்டிற்கு பழம் கொடுக்கும் போது மாடு, அவரது கட்டை விரலை கடித்து விட்டது. இதனால் அவர் வலியில் துடித்தார்.

கர்நாடகத்தில் விரைவில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பா.ஜ.க. சார்பில் 30 மாவட்டங்களிலும் 62 சுவராஜ்ஜிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி உடுப்பியில்  இந்த மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. உடுப்பிக்கு வந்தார்.

பின்னர் அவர் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். அப்போது அவர் மடத்தில் உள்ள பசுமாட்டிற்கு கோபூஜை செய்து வழிபட்டார். பின்னர் அந்த பசு மாட்டிற்கு அவர் பழம் கொடுத்தார். அந்த சமயத்தில் மாடு, நளின்குமார் கட்டீலின் கட்டை விரலை கடித்து விட்டது. இதனால் அவர் வலியில் துடித்தார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணா மடத்தின் மடாதிபதி ஈஷா பிரியா தீர்த்த ஸ்ரீபாத சுவாமியிடம் ஆசி பெற்று, சுவராஜ்ஜிய மாநாட்டிக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து