கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Koyambedu 2020 11 29

Source: provided

சென்னை : சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை எதிரொலியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை மேலும் நேற்று கார்த்திகை திருநாள். இத்தகைய காரணங்களால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை திடீரென கடுமையாக உயர்ந்ததாக காய்கறி வியாபாரி மணிகண்டன் என்பவர் தெரிவித்தார். 

அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் விலை உயர்ந்து நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து