இலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      உலகம்
Sri-Lanka 2020-11-30

Source: provided

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் அங்குள்ள இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர்.

கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவானது. எனவே கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பல கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

அதற்கு ஜெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஜெயில் காவலர்கள் அடக்க முற்பட்டனர். அது கைதிகள் மற்றும் காவலர்கள் மோதலாக மாறியது.

கடுமையான வன்முறை நடந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து