சிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோங்கர்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      சினிமா
Urmila 2020 12 01

Source: provided

மும்பை : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை ஊர்மிளா மடோங்கர் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். 

இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின்னர் அவர் மும்பை காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, கட்சியில் இருந்து விலகினார்.  இந்தநிலையில் நடிகை ஊர்மிளா மடோங்கர் சிவசேனாவில் சேர இருப்பதாகவும், அவருக்கு நியமன எம்.எல்.சி. பதவி கோரி முதல்வர் உத்தவ் தாக்கரே கவர்னருக்கு பரிந்துரை செய்து இருப்பதாகவும் தெரியவந்தது. 

இந்த நிலையில் நடிகை ஊர்மிளா மடோங்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தகவலை முதல்வர் உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய உதவியாளர் ஹர்சால் பிரதான் தெரிவித்து உள்ளார்.  மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு நடிகை ஊர்மிளா மடோங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து