முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறந்த பணி : 35 பேருக்கு விருது வழங்கிய முதல்வர் எடப்பாடி

திங்கட்கிழமை, 21 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2019 மற்றும் 2020–ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விதமாக, சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள், சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த ஆசிரியருக்கான விருதுகள், சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவருக்கான விருதுகள், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதுகள், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருதுகள் என 35 விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3–ம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கும் தமிழ்நாடு அரசால் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2019–ம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விருதுகள் வழங்கும் வகையில், சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள் சென்னை – ஹோப் பொது நல அறக்கட்டளை, சென்னை மித்ரா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் மற்றும் சென்னை ஆட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதுகள் சகோதரி மரியபிரிதீகா, ல. மணிகண்டன் மற்றும் அரிமா டாக்டர் லவ் ஓ.ஏ.கே. நாகராஜன் ஆகியோருக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் ஐ. ரீட்டா எலிசபெத் கிறிஸ்டீனா, இரா. நாகநாதன் மற்றும் ரோ.மரிய ஜெஸி ஆகியோருக்கும்,

சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவருக்கான விருதுகள் நா.பிரபு, டாக்டர் மா. கார்த்திகேயன், வே. ராதாகிருஷ்ணன், சுதா சீனிவாசன், சிரவந்தி சுதாகர் மற்றும் ச.ஜெகதீஸ் ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது ராணிப்பேட்டை – பாரத மின் மிகு நிறுவனத்திற்கும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் க. கற்பகம் மற்றும் வே.டிலைக்றா ஜெஸி ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருதுகள் டி.சந்திரமோகன் மற்றும் ஜி.மூர்த்தி ஆகியோருக்கும் முதலமைச்சர் நேற்று விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் 2020–ம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விருதுகள் வழங்கும் வகையில், சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள் திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மையத்திற்கும், சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னை இல்லத்தின் ப.ஸ்ரீதேவிக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் ஜெ.மஞ்சுநாதன், ச.ராஜா மற்றும் முனைவர் கி.தனலெட்சுமி ஆகியோருக்கும், சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவருக்கான விருதுகள் ச.ராஜசேகர், எம்.டென்னிஸ், ஜி.சுரேதா, டே.கென்னடி மற்றும் து. மதன் ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது வேலூர் – ஓர்த் அறக்கட்டளைக்கும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் சா. ஜெயமாலா மற்றும் ரா. ராமஜெயம் ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருதுகள் ஆர். மணவாளன் மற்றும் எஸ். முருகன் ஆகியோருக்கும் முதலமைச்சர் நேற்று விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவ்விருதுகளை பெறும் விருதாளர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் க.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து