Idhayam Matrimony

தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

திருச்சி : தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

கடந்த மாதம் 7-ந் தேதி கோவை மேட்டுப் பாளையத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 109 சட்ட மன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்த, எடப்பாடி பழனிசாமி நேற்று 3 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகை தந்தார்.

விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த பிரசாரக் கூட்டங்களில் எழுச்சி உரை ஆற்றினார்.

பின்னர் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிலவரம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரங்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் 2-வது நாளாக நேற்று மாலை 4 மணிக்கு மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்ச நல்லூர் கடை வீதியிலும், மாலை 5.30 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் அருகாமையிலும், இரவு 7 மணிக்கு முசிறி கைகாட்டி பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் பிரசாரம் செய்தார்.

மூன்றாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மணப்பாறை பஸ் நிலையம் அரு காமையிலும், மாலை 5.30 மணிக்கு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோடு, இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உரையாற்றி தமது 3 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து