முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      தமிழகம்
P R Kawai 2025-05-19

Source: provided

திருச்சி : திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில்  மின்னணு நூலக மையம் தொடக்க விழா நடந்தது. சங்க தலைவர் எஸ். பி.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்னணு நுாலகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பல ஆண்டு அனுபவம் கொண்ட திருச்சி வக்கீல் சங்கம் பல புகழ் வாய்ந்த வக்கீல், நீதிபதிகளை உருவாக்கியுள்ளது. சட்டத்துறையில் புகழ் பெற்று விளங்கிய பாலசுந்தரம் பெயரில் தொடங்கி வைக்கப்பட்ட மின்னணு நுாலகத்தை இளம் வக்கீல்கள் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது. தமிழ் மறை திருக்குறளில் கூறப்படாத தகவல்கள் எதுவும் கிடையாது. அடுத்த முறை திருச்சி வரும் போது இனிமையான தமிழ் மொழியில் பேச முயற்சிக்கிறேன்.

அதேபோல இங்கு தொடங்கப்பட்ட தரவு தளத்தை பயன்படுத்தி இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள், வழக்கு விவரங்களை இளம் வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவர்களின் அனுபவங்கள் வளரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு நீதிமன்றங்களில் நடக்கும் அன்றாட செய்திகளை வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் வக்கீல்கள் ஈடுபடவேண்டும்.

வாழ்நாள் முழுவதும் கல்வி பயிலுவது, தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.நான் சட்டம் முடித்து முதல் முறையாக கோர்ட்க்கு சென்ற போது எனது சீனியர் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மெட்ராஸ் ஜர்னல் எனும் புத்தகத்தை நாள்தோறும் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பாரம்பரிய புகழ் கொண்ட சென்னை ஐகோர்ட் பல சிறந்த வக்கீல்கள், நீதிபதிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து