Idhayam Matrimony

பீகார் மாநில சிறப்பு திருத்தம்: 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு : தேர்தல் ஆணையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் மக்கள் உரிமை கோரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் இன்னும் 8 நாட்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று கூறியுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து, அதை சரி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த காலகட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்துவது மட்டுமின்றி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது அதற்கான படிவத்துடன் மக்கள் சமர்ப்பிக்க தவறிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்நிலையில், ஜூன் 24 முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரையிலான 60 நாட்களில் சுமார் 98.2 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதை பீகார் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் எஞ்சியுள்ள 1.8 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வாக்காளர்களிடமிருந்து ஏற்கெனவே குறிப்பிட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரும் மக்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து