முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 215 பள்ளி நிர்வாகத்தை முடக்கியது காஷ்மீர் அரசு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      இந்தியா
Umar-Abdullah 2024-10-16

Source: provided

ஸ்ரீநகர் : ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளி நிர்வாகத்தை காஷ்மீர் அரசு முடக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் செயல்படும் ஏராளமான பள்ளிக்கூடங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ் லாமியின் பலே-இ-ஆம் அறக்கட்டளையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

அத்தகைய பள்ளிகளின் நிர்வாகக் குழுவை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையர் நடவடிக்கை எடுப்பார். ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு புதிய நிர்வாகக் குழுவை அவர் முன்மொழிவார். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவ​காரத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் அல்​லது துணை ஆணை​யர் பள்​ளிக் கல்​வித் துறை​யின் ஆலோ​சனைப்​படி செயல்​படு​வார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மாவட்ட நிர்​வாக அதி​காரி​கள், காவல் துறை​யினர் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​களுக்கு அரு​கில் உள்ள உயர்​நிலைப் பள்ளி முதல்​வர்​கள் அடங்​கிய குழு​வினர் நேற்று காலை​யில் சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​களுக்​குச் சென்​றனர். அங்​குள்ள கோப்​பு​களை ஆய்வு செய்த அக்​குழு​வினர், பள்ளி நிர்​வாகத்தை அரசின் கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சட்​ட​விரோத செயல்​கள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புக்கு மத்​திய உள் துறை அமைச்​சகம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி 28-ம் தேதி தடை விதித்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து