முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பள்ளிக்கூடங்கள் திறப்பு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

இன்று பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையத்தில் மன்னர் காலிங்கராயன் தின அரசு விழா நடைபெற்றது. காலிங்கராயன் மணி மண்டபத்தில் காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மாலை அணிவித்தனர்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

காலிங்கராயன் 56.5 மைல் நீளத்திற்கு கால்வாய் வெட்டி 15 ஆயிரத்து 745 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தினார். இக்கால்வாயில் ஒவ்வொரு 2 ஏக்கருக்கும் ஒரு மதகு என 786 மதகுகள் உள்ளன. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே யாரும் சிந்தித்துக்கூட பார்க்காத ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். எனவே அவரைப் போற்றும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2016-ல் அவருக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்டார். அம்மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காலிங்கராயன் எந்தளவிற்கு மனிதநேயம் மிக்கவர் என்பதை அவர் எழுதி வைத்த சாசனத்தில் எனது வாரிசுகள் இத்திட்டத்தால் பயனடையக்கூடாது என தெரிவித்ததைக் கொண்டு உணரலாம். அவரும் இந்த கால்வாயை வெட்டிய பிறகு தனது இருப்பிடத்தை கோவைக்கு மாற்றிக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது வாரிசுதாரர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை இயக்குநர், துணை இயக்குநர், பொறுப்பில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது சுகாதாரத்துறை மாணவர்கள் நலன் கருதி சுமார் 30 லட்சம் சத்து மாத்திரைகளை வழங்க உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் போதிய இடைவெளிவிட்டு அமரவும், முகக்கவசம் கண்டிப்பாக அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி முதல்வருடன் கலந்தாலோத்து அறிவிக்கப்படும். தற்பொழுது சுமார் 40 சதவீதம் அளவிற்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எந்த புகாரும் பெற்றோரிடமிருந்து வரவில்லை. இதர வகுப்பகளுக்கு தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்று இப்பொழுது கூறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்து பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு அறைக்குள் 25 மாணவர்களே அனுமதிக்கப்படுவர் என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து