மகாராஷ்டிராவில் திடீர் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
earthquake 2021 01 18

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

ஆனாலும் நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து