முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டூர் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. மேட்டூர் அணைக்கு கடந்த வெள்ளிக்கிழமை 1206 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1356 கன அடியாக அதிகரித்தது. நேற்று சற்று குறைந்து விநாடிக்கு 1351 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.  

காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 105.92 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் 105.96 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 105.97 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் இதே போல் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து