முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசுக் கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பெருந்துறையில் தமிழக போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆண்டுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியிலும் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து