முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது: மனுக்களை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாளாகும்

வியாழக்கிழமை, 18 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 22-ம் தேதி கடைசி நாளாகும். அதை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

கடந்த 13 மற்றும் 14–ந்தேதி விடுமுறை என்பதால் மார்ச் 15–ந்தேதி அ.தி.மு.க., தி.மு.க., அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களும் அவர்களது தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலி்ன், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அ.ம.மு.க.வை சேர்ந்த டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமலஹாசன் ஆகியோரும் அன்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆதிராஜாராம் (கொளத்தூர்), ஆர்.நட்ராஜ் (மயிலாப்பூர்), பி.சத்யநாராயணன் (தியாகராயநகர்), பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்), பா.ம.க. வேட்பாளர் கசாலி (சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி) ஆகிய அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 

இதேபோல நேற்று தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. நாளை 20-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். இதைத்தொடர்ந்து தகுதியுடைய வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். அதன்பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.

இந்த தேர்தல் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் நடைபெறுகின்ற ஒரு மாறுபட்ட தேர்தலாகும். இந்த தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களே ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். இத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கமலஹாசன் தலைமையில் ஒரு அணியும், டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. இணைந்து ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களம் காணுகின்றன. இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து