Idhayam Matrimony

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் நேற்று (செப்.1) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண சீசன், அடுத்த நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலமும் வரும் என்பதாலும், சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று (செப்.1) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையானது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து