எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்
டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப கொடுத்தால், 10 ரூபாய் வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நந்தது. இதில், பணியாளர்கள், டாஸ்மாக் கடைகள் அருகிலேயே காலி மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள, தனியாக இடம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாடகையை பணியாளர்களே செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தநிலையில், திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைத்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திருவள்ளூர் சுற்றுவாட்டாரத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுகிடைக்காத விரக்தியில் மதுபிரியர்கள் பரிதவிப்புடன் திரும்பி செல்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


