எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார். மறுநாள் அப்பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக நாயகன் தருண் விஜய் போலீஸில் சரணடைகிறார். விசாரணையில் மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக சொல்கிறார். அப்படி அவர் கூறிய இரண்டு பேரும் உயிருடன் இருக்க, காவல்துறைக்கு தலை சுற்றுகிறது. இப்படி புது வடிவிலான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘குற்றம் புதிது படத்தின் கதை. அறிமுக நாயகன் தருண் விஜய், முதல் படத்திலேயே அபாரமாக நடித்துள்ளார். கொலை செய்ததையே ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் காட்சியில் கைதேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். நாயகி சேஷ்விதா கனிமொழி, கண்களாலே உணர்வுகளை கடத்தி விடுகிறார். மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மட்டுமல்ல கரண் பி.க்ருபாவின் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் நோஹா ஆம்ஸ்ட்ராங், ஒரு பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, வேகமான காட்சியமைப்பு என்று புதுவிதமான கிரைம் திரில்லர் ஜானர் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


