தங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு

Gold-price 2020-11-10

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் நேற்று விலை குறைந்துள்ளது .

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை நேற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.4,260-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து கிராம் 69.90 காசுகளாகவும் கிலோ ரூ. 69,900 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து