முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டியில் புதிய சாதனை: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தேவை இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே!

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் போதும் டி-20 போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை ஒன்றை படைத்து விடுவார். அடுத்த போட்டியில் அது நிறைவேறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். தொடர் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதில் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தி டி-20 போட்டிகளில் 250 விக்கெட்களை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 3 ஓவர்கள் வீசிய அஸ்வின் விக்கெட் ஏதும் எடுக்காததால் அவர் அந்த மைல்கல்லை அடுத்த போட்டியில் எட்ட வாய்ப்புள்ளது. 34 வயதான அஸ்வின் ஐ.பி.எல் போட்டிகளில் 139 விக்கெட்களையும், இந்திய அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் தற்போது 6-வதாக உள்ளார் அஸ்வின். இந்த வகையில் ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இலங்கையின் லசித் மலிங்கா உள்ளார். அவர் ஐ.பி.எல்-ல் 170 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய மலிங்கா, 4-வது ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஐ.பி.எல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 160 விக்கெட்களுடன் அமித் மிஸ்ரா 2ம் இடத்திலும், 156 விக்கெட்களுடன் பியூஸ் சாவ்லா 3ம் இடத்திலும், 154 விக்கெட்களுடன் மேற்கு இந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ 4ம் இடத்திலும், 150 விக்கெட்களுடன் ஹர்பஜன் சிங் 5ம் இடத்திலும் உள்ளனர். லசித் மலிங்கா தவிர்த்து பிற வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து