முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலில் தேர்தல் ஆணையத்துக்கும் பொறுப்பு: கோர்ட்டின் கருத்துக்கு மம்தா பானர்ஜி ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இயலாது என்று சென்னை ஐகோர்ட்டின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்திருந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. அதில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 

சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்தை நான் வரவேற்கிறேன். தேர்தல் ஆணையம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது எனத் தெளிவாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியதற்கு பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும்தான் காரணம். 

நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் கொரோனா பாதி்க்கப்பட்ட மாநிலங்களில் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் தங்கியிருக்கும் 2 லட்சம் மத்தியப் படைகளை வாபஸ் பெறுங்கள். இதில் 75 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் வழங்கிடுங்கள். கடைசிக் கட்டத் தேர்தலில் மத்தியப் படைகளை தயவு செய்து வாபஸ் பெறுங்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து