Idhayam Matrimony

துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
ghill

Source: provided

மும்பை : துலீப் டிராபி தொடரை சுப்மன் கில் தவறவிட்டார். 

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துலீப் டிராபி தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் இருந்து சுப்மன் கில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை அவர் இந்த தொடரில் இருந்து விலகினால் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக அங்கித் குமார் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து