Idhayam Matrimony

ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vijay-Vasant-2025-08-23

Source: provided

கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி பங்கேற்று பூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் அழகுமீனா, மாவட்ட கல்வி துறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் மற்றும் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும், தக்கலையில் வசந்த் அன்கோவின் 130-வது கிளை நேற்று திறக்கப்பட்டது. வசந்த் அன்கோ பார்ட்னர் விஜய்வசந்த் எம்.பி. புதிய கிளையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து