முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் சிறையில் அடைப்பு: பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 25 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த  பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் ராஜகோபாலன்  கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. 

அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுன் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி கைதான ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்தச்  சம்பவத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கைதான ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  அந்த சம்மனில் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் ஜூன் 4-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.  மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து