உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்

Modi 2020 12 14

Source: provided

புதுடில்லி : ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி கூறியுள்ளார்.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, ஜி - 7 என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது. இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 

இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசிக்கான மூலப்பொருள் விநியோக சங்கிலி, எந்தவிதத்தடையுமின்றி தொடர வேண்டும். இந்த தருணத்தில், உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம் என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

இந்தியாவில், கோவிட்டிற்கு எதிராக அரசு, தொழில்துறையினர், பொது மக்கள் என ஒட்டு மொத்த சமூகமும் போராடி கொண்டுள்ளது. இது போன்ற பெருந்தொற்றுகள் வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை. இவ்வாறு பிரதமர் பேசினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து