முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்புக்காக நடித்த அதர்வா

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் அட்ரஸ்.  குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய இயக்குனா் ராஜா மோகன் அட்ரஸ் என்ற புதிய படத்தை இயக்குகிறார். நம் நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர் ஒன்று உள்ளது. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிறபோது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே அட்ரஸ் படத்தின் கதை.  இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், நந்தகுமார், நாகேந்திரன், முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதனிடையே,

இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து