முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் 100 பேரைக் கொன்ற தலிபான்கள்: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல்: ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் காந்தஹார் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் பொதுமக்கள் 100 பேரைக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் ஆணைக்கு இணங்க தலிபான்கள் செயல்படுகின்றனர். அப்பாவி ஆப்கன் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து