அருள்நிதி நடிக்கும் மிஸ்டரி த்ரில் படம்

Arulnidhi 2021 07 24

Source: provided

தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

‘தேஜாவு’ படத்தினை அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்க, வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை-தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த் பணியாற்றி வருகிறார்.  தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து