அ.தி.மு.க.வில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது: போடியில் ஓ.பி.எஸ். பேட்டி

OPS 2021 07 12 2

அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று  உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி அ.தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதன் பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அ.தி.மு.க.வை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும். ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கக் கூடிய பா.ஜ.க.வுக்குத்தான் உரிமை உள்ளது என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து