Idhayam Matrimony

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Fisher-Boat 2025-10-09

Source: provided

ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் காரைக்கால் மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் அருகே கடந்த 10-ம் தேதி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த மற்றும் சேதம் அடைந்த படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 11-ம் தேதியில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் காவவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. வேலை நிறுத்தத்தால் 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து