Idhayam Matrimony

எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Manimaran 2025-10-13

Source: provided

கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளிதழ் ஊழியர்கள் சார்பாக எங்களின் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.  அவரது மறைவிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அப்பொழுது தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர். 

மறைந்த நிறுவனர் திரு.கே.ஏ.எஸ். மணிமாறன் அவர்கள் பத்திரிக்கை துறையில் நிலவும் போட்டி சூழலை திறம்பட கையாண்டு அதில் முத்திரை பதித்தவர்.  அவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் ஜனநாயகத்தின் 4-ம் தூணான பத்திரிகை துறையாக விளங்கும் தினபூமி நாளிதழ் இன்றளவும் ஏற்றமிகு நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கு வித்திட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது. அவரது ஆசியுடனும், மக்கள் நல்ஆதரவோடும் தினபூமி நாளிதழ் மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்யும் என்பதை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம்.

- தினபூமி நாளிதழ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து