Idhayam Matrimony

கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay 2025-10-13

Source: provided

சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 16-ம் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னையில் த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெளியே நுழைவு வாசல் பகுதியில், அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளன.

அதன் கீழே உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம் என்ற வரிகள் எழுதப்பட்டு உள்ளன. பலியானவர்களின் பெயர்களுடன் மெழுகுவர்த்தி எரிவது போன்றும், புகைப்படம் இல்லாதவர்களின் இடங்களில் பூக்குடையும் இடம் பெற்று உள்ளன. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து