சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு

Gold-raye-2021-07-2021

Source: provided

சென்னை: நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இதனால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர்.

இதனால் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.  இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று முன் தின விலையுடன் ஒப்பிடும்பொழுது நேற்று உயர்ந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.23 உயர்ந்து ரூ.4,530க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 240க்கு விற்பனையாகிறது.  24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39 ஆயிரத்து 152க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ.72.20-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.72 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து